அரு.பெரியண்ணன் – மீனாட்சி நூற்றாண்டு விழாவில் தமிழின் இன்றியமையாத எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
நாம் அழைத்தால் அவர் வருவாரா, வர மாட்டாரா என்று தெரியாது. முயற்சி செய்வோம் என்று அழைத்தோம். திரு. ஜெயமோகன் அவர்களுடன் பேசும் போது, அவர் தான் தமிழ் விக்கியில் அரு. பெரியண்ணன் குறித்த செய்திகளைப் பதிலிட்டராகப் பகிர்ந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.
மலைப்பகுதியில் இருந்து ஈரோடு வந்து, அங்கிருந்து சென்னை வந்து, விழா முடிந்ததும் மறுபடியும் உடனே ஈரோடு திரும்பி. மீண்டும் காரில் மலைக்குத் திரும்பினார். இல்வளவு கடுமையான ஒரு நாள் பயணம் மேற்கொண்டு பெரியண்ணன் ஐயாவின் நூற்றாண்டு விழாவிற்கு வந்தார்.
தான் அரு.பெரியண்ணன் நூற்றாண்டு விழாவிற்கு ஏன் வந்தேன் என்று பேசியதோடு மட்டுமல்லாமல் அவரின் jeyamohan.in பக்கத்திலும் விழாவைப் பற்றி ஒரு நீண்ட பதிலினைப் பகிர்ந்துள்ளார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. (பதிவு கருத்துப்பகுதியில் உள்ளது).
இது போன்ற பதிவுகள் நாம் செய்யும் முயற்சிகளுக்கு பெரும் ஊக்கம் தருகின்றன.
மிக்க நன்றி ஜெயமோகன் ஐயா.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்