யாழ்ப்பாணம் இலங்கை பயணம்
Jaffna, Sri Lanka Trip

யாழ்ப்பாணம் இலங்கை பயணம்

கடந்த வாரம், தொழில் முறை பயணமாக யாழ்ப்பாணம் இலங்கை சென்றிருந்தேன். செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் 20-30 வருடங்களாகப் படித்த தமிழர்கள் வாழும் வக்குப் பகுதிக்குச் செல்கிறோம் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது.

சென்னையிலிருந்து 40-50 நிமிடங்கள் தான் விமானப் பயணம் கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றுலாவிற்கும், மக்கள் யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வருகிறார்கள்.  யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் (Railway Station), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். 1981ல் ஏரிக்கப்பட்ட பொதுசன நூலகத்திற்கு சென்றோம்.

இரயில் நிலையமும், விமானப் விமானப்போக்குவரத்தும் பல வருட நிறுத்தத்திற்கு பின்னர் சம்பத்தில் தான் இயங்கத் தொடங்கி உள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுடன் உரையாடினோம். வாசிப்புப் பழக்கம் நான் உரையாடிய மாணவர்களிடம் நிறையவே இருந்தது. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஆன தொடர்பு ஆயிரம் வருடங்களுக்கு மேலானது என்பதை நாம் நன்கு அறிவோம். பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.

கல்வியும், தொழில் நுட்பமும், தொழிலும் இருநாடுகளுக்கான உறவை வலுப்படுத்தும். நம் பக்கத்து வீட்டுக்காரர் வசதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தால் நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் நல்லது தானே!

வளமான வடப் பகுதி, வளமான இலங்கை இந்தியாவிற்குப் பலம்.

கதைப்போம்

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top