ஒரு கூற்றை பலர் பல முறை சொல்லும் போது, அதை ஆராயாமல் அவர்கள் சொன்னது சரிதான் என்று நமக்கு நம்பத் தோன்றும். ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்று பாரதியார் எழுதியதாகப் பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.
பாரதியார் இது போல் எழுதினாரா என்பதை ஆராயாமல் கூகுளில் ஒரு தட்டு தட்டிவிட்டு சில மேடைகளில் கூட பாரதியார் இல்வாறு சொன்னார் என்று அவரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறேன்.
இப்போது அதற்கு வருந்துகிறேன். பாரதியார் எழுதியதாகக் கூறப்படும் இந்த வாசகம் அவரின் தமிழ்த்தாய் என்ற கவிதையில் இடம் பெறுகிறது.
“மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ”
பேதை என்பதற்கு அறிவில்லாதவர், முட்டாள் என்று பொருள். பேதை உரைத்ததாக பாரதியார் எழுதியதை. நம்மில் சிலர்/பலர் (நான் உட்பட) பாரதியார் உரைந்ததாக மாற்றி விட்டோம்.
பாரதியார் எழுதியதை, சரியாகப் படிக்காமல், அவரை மேற்கோள் காட்டி பேசியதற்காக வருந்துகிறேன். என் தவறைப் புரிந்து கொண்டேன்.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்