உறவும், நட்பும் உள்ளபோது, சில சமயம் அவர்களின் அருமை நமக்குப் புரிவதில்லை.. நல்ல நிலையில் இருக்கும் ஒருவர் சில காரணங்களால் அவரின் நல்ல நிலை முற்றிலும் மாறக்கூடும். ஒருவர் நன்றாக இருக்கும்போது அவருடன் இருக்கும் நட்பும், உறவும், அவருக்கு உதவி தேவைப்படும்போது பெரும்பாலும் இருப்பதில்லை. இருப்போரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சிலர் நம்மை உதாசினப்படுத்தும்போது அவர்கள்மீது கோபம் கொள்ளாமல், வாய்ப்பாகப் பயன்படுத்தி, நாம் வளர வேண்டும்.
சிலர் நமக்குத் தீங்கு செய்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கு நாம் பன்மடங்கு அதிக தீங்கு செய்து உறவை முறித்துக் கொள்ளாமல்.
அவர்களுக்கு ஒரு தேவை என்று வரும்போது, நம்மால் முடியுமானால், அவர்களுக்கு நல்லது செய்வது, அல்லது அவர்கள்மீது நல்ல எண்ணங்களை வளர்ப்பது, உறவையும், நட்பையும் மேம்படுத்தும்.
உறவையும், நட்பையும் ஒரு மகிழ்ச்சியான சூழலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், நட்பும், உறவும் தேவைப்படுவோர் மீது கவனம் செலுத்தி, அவர்கள் மேம்பட வழி செய்யும்போது நம் வாழ்வு சிறக்கும். இதனால் நம் நட்பு, உறவு வட்டமும் பெருகும். நம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்