உறவுகள் மேம்பட விழாக்கள் ஒரு கருவியாக உள்ளன. நாம் ஒருவரை நம் திருமணத்திற்கோ, வேறு நிகழ்வுக்கோ அழைத்து அவர்கள் வரவில்லை என்றால் ஒரு வருத்தம் இருக்கும். அவர்கள் வராமல் இருப்பதற்கு நாம் அறியாமல் பலக் காரணங்கள் இருக்கக்கூடும்.
பொதுவாக, திருமண வீட்டிற்கோ, இறப்பு வீட்டிற்கோ. அல்லது வேறொரு கூடலுக்கோச் செல்லும்போது நாம் பலரைச் சந்திக்கும் வாய்ப்புகள் அமைகின்றன. நாம் அதிகம் பேசாவிட்டாலும், ஒரு வணக்கமோ, கைக்குலுக்கலோ உறவை நிச்சயம் வலுப்படுத்தும்.
இது போன்ற விழாக்களுக்கு, நம் பிள்ளைகளையும் அழைத்துச் செல்லும்போது, இன்னார் பிள்ளைகள் இவர்கள் என்று தெரியவும், நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கு உறவுகள் மேம்படவும் இவை பெரிதும் பயன்படுகின்றன.
நாம் வேலைக்காகத் துபாய், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என்று பல்லேறு நாடுகளில் குடிபெயரும்போது குடும்ப உறவுகளுக்குப் பதில் இங்கு நண்பர்கள்.
நாம் ஒரு நான்கு விழாக்களுக்கு, நல்லது கெட்டதுக்கு நாலு பேர் வீட்டுக்குச் சென்றால் தான், ஒருநாலு பேர் நம் வீட்டு விழாக்களுக்கும் வருவர்.
கடந்த நான்கு வாரங்களாக உறவுகள்குறித்து எழுதி வருகிறேன். இந்த வாரத்தோடு இது முற்றும்.
அடுத்த வாரம் சந்திப்போம்.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்