சரிபார்க்கும் பட்டியல்

சரிபார்க்கும் பட்டியல்

நாம் வெளியூர் செல்லும்போது என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஒரு சிறு தாளில், பட்டியல் எழுதி அதை எடுத்துவைத்து விட்டோமா என்று சரிபார்ப்போம் என்று சரி பார்ப்போம். இரயில் ஏறும் முன்னர் எதையும் மறந்து விடாமல் இருக்க இந்த பட்டியல் பெரிதும் உதவும்.

இந்த சரிபார்க்கும் பட்டியல் துணிமணிகளுக்கு மட்டுமன்றி, நாம் தினசரி செய்யும் வேலையிலும் பயன்படுத்தலாம். ஒரு தொழில்முறை பயணத்தின் போதோ, அலுவலக சந்திப்பின்போதோ இதுபோன்ற சரிபார்க்கும் பட்டியல் பெரிதும் பயன்படும்.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் முன்னர் சரிபார்க்கும் பட்டியல் பெரும் அளவில் உதவும். உதாரணமாக சரியான நபருக்கு சரியான இடத்தில் தான் அறுவை சிகிச்சை செய்கிறோமா போன்றவற்றை தெளிவுபடுத்த சரிபார்க்கும் பட்டியல் அவசியம்.

விமானிகளுக்கு, விமானம் பறக்கும் முன்னர், பறக்கும்போதும் தரையிறங்கும்போதும்  செய்ய வேண்டியவை என்னென்ன போன்றவற்றுக்கு சரிபார்க்கும் பட்டியல் பயன்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர் அடுல் கவாண்டே The Checklist Manifesto என்ற ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அண்மையில் வாசித்தேன். பயனுள்ளதாக இருந்தது.

நீங்களும் உங்கள் வேலையில் சரிபார்க்கும் பட்டியல் பயன்படுத்தவில்லை என்றால் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.

நன்றி…

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Share
Download Download
Top