பிக் பாஸ்
big bos

பிக் பாஸ்

சென்னை அண்ணாநகரில் ஜெஸ்ஸி மோசஸ் பள்ளிக்கு எதிரில் இருக்கும் பிக் பாஸ் என்னும் முடி வெட்டும் கடைக்கு பல வருடங்களாக வாடிக்கையாளராக உள்ளேன். கடையில் பெரும் ஆடம்பரம் எல்லாம் இல்லை. முடி வெட்ட 150 ரூபாய். ஓரளவு எப்போதும் கூட்டம் இருக்கும்

ஒரு தொழில் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு இந்தக் கடை ஒரு சிறந்த உதாரணம். நல்ல இடம், நான்கு ஐந்து இருக்கைகள், 3-4 வேலை ஆட்கள், எப்போதும் வாடிக்கையாளர்கள், சில கடைகளில் முடி வெட்ட 1500 ரூபாய் கூட வாங்குவர். இந்தக் கடைக்குச் செல்லும் போது, ஏன் இவர் 150 ரூபாய் மட்டும் தான் வாங்குகிறார். இன்னும் கூட வாங்கலாமே! என்று எண்ணியது உண்டு.

நீங்கள் உங்கள் விலையை உயர்த்த வேண்டும் என்று கடைக்காரரிடம் கூட சொல்ல நினைத்தேன்.

அண்மையில் பிக் பாஸ் கடைக்குச் சென்றபோது. 150 ரூபாய்க்கு பதில் 200 ரூபாய் கேட்டனர். என்னாச்சு? என்று கடையில் வேலை செய்பவரிடம் கேட்டேன். அவர் இந்த வருடத்திலிருந்து இருந்து முடி வெட்ட  200 ரூபாயாக மாற்றியுள்ளோம் என்றார்.

கடைக்கு வருவோர் பலர் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தினர் தான். பெரும்பாலும் யாரும் 150 ரூபாய் தான் கொடுப்பேன் என்று சொல்லப்போவதில்லை. (வெளியில் 1,500 ரூபாய்). 

நல்ல விலையில் விற்றால் தான் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையும் தரமுடியும். கடைக்காரருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டு விடைபெற்றேன். 

நன்றி… 

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags: big bos
Share
Download Download
Top