’52 வயது முதல்வர்’
'52 வயது முதல்வர்'

’52 வயது முதல்வர்’

நம் தமிழகத் முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு வயது 52. நன்றாகத் தமிழ் பேசுகிறார். அவரால் அழகாக வாசிக்கவும் முடிகிறது. எழுதுவார் என்பது நம்பிக்கை.

மே மாதத்தில் அவரின் பெரும் வெற்றி சில, பல வகைகளில் அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கிறது. 

அந்த வெற்றியில் இருந்து நாம் அனைவரும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

இன்று நம்மில் பலர் (நான் உட்பட) ஆங்கிலம் கலந்துதான் தமிழில் பேசுகிறோம். 

ஏன்? நம் சட்டமன்றத்தில் கூட, இதை ‘ட்ரெண்ட்’ என்று சொல்லிக்கொண்டு கொண்டாடுகின்றனர். 

இதில் வேடிக்கை என்னவென்றால், எதிர்க்கட்சிகளும் இதையே பின்பற்றுவதுதான்.

சில, பல தலைமுறைகளுக்கு, தமிழைத் கற்பிக்காமல் விட்டுவிட்டோம். இதன் விளைவுகளை தற்போது அனுபவிக்கிறோம். இதை சரி செய்யவில்லை என்றால் நம் நாகரிகமும், பண்பாடும் செழிக்காது. 

நம் பிள்ளைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

சற்று சிந்தித்துப் பார்க்கிறேன். 2043ம் வருடம் 52 வயது நிரம்பிய ஒருவர் தமிழ்நாடு முதல்வரானால் அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமா? எழுதத் தெரியுமா என்பதெல்லாம் பெரும் கேள்விக்குறி? இந்நிலையை மாற்றுவோம்.

கடந்த ஐந்து வாரங்களாக ‘தமிழ்’ குறித்து ஞாயிறு கடிதத்தில் எழுதினேன். டிசம்பர் மாதம் வேறு தலைப்பில் எழுதுகிறேன்.

நம் தமிழ்
நம் தமிழ்நாடு.

நன்றி,

கார்த்திக் சிதம்பரம்

Category:
Tags:
Share
Download Download
Top