மாலை 4 முதல் 6 வரை
4 pm to 6 pm

மாலை 4 முதல் 6 வரை

விளையாட்டின் அவசியத்தை பல நேரங்களில் பல பெற்றோர் உணர தவறி விடுகின்றனர். ஒரு மாணவன் /மாணவி காலை 8 மணியிலிருந்து மாலை 3 மணி வரை பள்ளிக்குச் சென்று திரும்பியவுடன் மாலை 4 மணிக்கு கணிதம் அல்லது அறிவியல் தனி வகுப்புகளுக்கு (Tuition) செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பல தனி வகுப்பு ஆசிரியர்கள் அவரவர் வீடுகளில் இரவு ஏழு மணிக்கு மேல் அவர்களின் வீட்டு வேலைகள் இருக்கும் என்பதால் பெரும்பாலும் தனி வகுப்புகளை 4 மணியில் இருந்து 7 மணி வரை நடத்துகின்றனர்.

இதுபோல் ஒரு நிலையில், பெரிதும் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகள் தான். தினமும் ஏதாவது ஒரு விளையாட்டை நாமும் நம் பிள்ளைகளும் விளையாடவில்லை என்றால், உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும் நிலைதான் ஏற்படும்.

ஒரு பிள்ளை என்னதான் நன்றாகப் படித்து கணிதத்தில் 100/100 வாங்கினாலும் அந்தப் பிள்ளையின் உடல் நிலை சரி இல்லை என்றால்… என்ன படித்து… என்ன பயன்?

பள்ளிகளில் இருந்து வந்தவுடன் நம் பிள்ளைகளை முதலில் தனி வகுப்புகளுக்கு அனுப்பாமல் வெயில் பட விளையாடச் செய்வோம். அது நம் பிள்ளைகளின் படிப்புக்கும் பெரிதும் உதவும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Sunday letter
Tags:
Share
Download Download
Top