தள்ளுபடி கேளுங்கள்
Discount

தள்ளுபடி கேளுங்கள்

சிறு வயதில் அப்பாவுடன் எந்த ஒரு கடைக்குச் சென்றாலும், பொருட்கள் வாங்கும் போது நிர்ணயித்த விலையிலிருந்து தள்ளுபடி கேட்பார். கடைக்காரர் இல்லை என்று சொன்னாலும் மறுபடியும் கேட்பார். பல சமயங்களில் தள்ளுபடி கிடைக்கும். இதில் சிறுவனாக எனக்கு உடன்பாடு இல்லை. சில சமயங்களில் கோபம் வரும். வெட்கமாகவும் இருக்கும்.

பின்னாளில் ஒரு புத்தகம் (The only investment guide you’ll ever need, Andrew Tobias) படித்தேன். அப்பா செய்வதை அதில் அப்படியே எழுதி இருந்தது. எந்தப் பொருள் வாங்கினாலும் பொருளின் விலையில் தள்ளுபடி கேளுங்கள். கடைக்காரர்கள் நல்ல லாபத்தோடு தான் ஒரு பொருளை விற்பர். அவர்கள் லாபத்தில் ஒரு சதவிதத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். தள்ளுபடியில் சேமித்த பணம் சம்பாதித்த பணம் போன்றது என்று எழுதியிருந்தது. இது சரிதான் என்று புரிந்து, நல்ல கற்றலாக அமைந்தது. 

ஒரு பொருள் வாங்கும் போது, விலையில் தள்ளுபடி கேளுங்கள். தள்ளுபடி விலையில் விற்றாலும் மேலும் தள்ளுபடி கேளுங்கள். 

தள்ளுபடி கேட்டு பொருள் வாங்குங்கள்

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top