உங்கள் குறைகளைக் கேளுங்கள்
Listen to your grievances

உங்கள் குறைகளைக் கேளுங்கள்

ஒருவர் நம்மை பாராட்டுவதை விட நம் குறைகளைக் கூறும் போது, அது நம்மை மேம்படுத்திக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

நம் பழக்கவழக்கங்களில் அல்லது நாம் செய்யும் வேலையில், நம் உற்றார், உறவினர், நண்பர்கள் குறை கூறலாம். அப்போது, கோபம் கொள்ளாமல், இவர் எப்போதும் இப்படித்தான், குறை கூறிக்கொண்டே இருப்பார் என்று சொல்லாமல் அவர்கள் கூறும் குறைகளில் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தியுங்கள்.

குறைகளில் உள்ள நிறைகளைத் தேர்ந்தெடுத்து எந்தக் குறைகளை நாம் திருத்திக் கொள்கிறோம், எதைப் புறக்கணிக்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி. 

அடுத்த முறை ஒருவர் உங்கள் குறைகளைக் கூறும் போது, மறுபேச்சு பேசாமல் என் குறைகளைக் கூறியதற்கு நன்றி என்று கூறுங்கள் அதில் ஏதும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். ஒருவர் நமக்கு பின்னூட்டம் (Feedback) தருவது தங்கம் தருவதற்குச் சமம். 

உங்கள் குறைகளைக் கேளுங்கள்.

‘இனிய பொங்கல் வாழ்த்துகள்’

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top