தன் விவரக் குறிப்பு (Resume) எப்படி இருக்க வேண்டும்!
Resume

தன் விவரக் குறிப்பு (Resume) எப்படி இருக்க வேண்டும்!

நாம் வேலைக்குச் சேரும் போது பெரும்பாலும் பல பக்கங்களில் Resume தயார் செய்வோம். ஒரு நல்ல தான் விவரக் குறிப்பு எப்படி இருக்க வேண்டும்?

1. ஒரு பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

2. ஆண், பெண் போன்ற தகவல்கள் தேவையற்றது.

3. தந்தை பெயர், அலர் செய்யும் வேலை போன்றபற்றை எழுதாதீர்கள். (உங்களைத் தான் வேலைக்கு எடுக்கிறார்கள்).

4. நீங்கள் வென்ற பரிசுகளைப் பட்டியலிடுங்கள். குறியீட்டுப் போட்டிகளில் (Coding Contest) வென்றிருந்தால் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரிதும் விரும்புவர்.

5. வாசித்தல், எழுதுதல் போன்ற திறன்களை நல்ல நிறுவணங்கள் விரும்பும். தொடர்ந்து எழுதி அதை வலைதளப் பக்கங்களில் (Blog) பதிவிட்டுக் குறிப்பிடுங்கள்.

6. நீங்கள் உருவாக்கும் செயலிகளை GitHubல் பதிவிட்டு இணைய முகவரியைக் குறிப்பிடுங்கள்.

7. லிங்டின் (LinkedIn) போன்ற தளங்களில் உங்கள் சுயவிவரத்தை, செய்யும் வேலையைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள்.

8. ஒரு அழகிய வடிவத்தில் தன் விவரக் குறிப்பு இருப்பது அவசியம். Canva, Figma போன்றவற்றைப் பயன்டுத்துங்கள்.

9. உங்கள் பெயர், உங்களை எப்படித் தொடர்பு கொள்வது. அலைபேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றைத் தெளிவாக தெரியும் படி எழுதுங்கள்.

10. செய்யாத வேலையைத் தன்விவரக் குறிப்பில் குறிப்பிட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Tags: Resume
Share
Download Download
Top