இந்திய வானிலை அறிக்கையின்படி தமிழகம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேவையான மழையினைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 6286.84 ஏக்கர் அளவில் 1821 க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் போன்ற நீர் நிலைகள் உள்ளன. கிட்டத்தட்ட 23 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் மக்களிடையே எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பதை ஆராய்ந்து, நீர்நிலைகளை பராமரித்து மேம்படுத்தி, புதிய நீர் நிலைகள் உருவாக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பின்வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தடுக்க முடியும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்