மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா

வெற்றி பெறும் குழுக்களில் பெண்கள் இருப்பர். மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா புதிதாகக் கட்டப்பட்ட நம் இந்திய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வாழ்த்துகள். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது 2029க்கு முன் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் இருந்து நம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே 33% சதவிதத்திற்கு மேல் பெண்கள் உள்ளனர். நம் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் 50% தொகுதிகளைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. நல்லதை யார் செய்தாலும் அதுபோல் நாமும் செய்யலாம்.

ஒரே இரவில் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து நடைமுறைப்படுத்தும் போது மகளிர் 33% இடமுதுக்கீடு மசோதாவையும் உடனே நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம்.

நம் தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளும், 50% தொகுதிகளைப் பெண்களுக்கு ஒதுக்கி, 33%க்கு மேல் பெண்களை நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம்.

இது பல நன்மைகளைத் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெற்றுத் தரும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top