அமெரிக்காவில் படிக்கச் சென்று வேலை செய்து முதல் முறை சென்னைத் திரும்பிய போது, எதைப் பார்த்தாலும் வாங்கத் தோன்றியது. கண்டபடி செலவு செய்தேன்.
இதைப் பார்த்த என் சித்தி ஒருவர் அவன் புதுப்பணக்காரன். அப்படித்தான் செலவு செய்வான் என்று சிரித்துக் கொண்டே கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் அம்மாவிடம் கேட்டேன். முதல் முறை பணம் சம்பாதிக்கும் போது எதற்காக பொருளை வாங்குகிறோம் என்று தெரியாமல் வீணாகச் செலவு செய்கிறவர்களைப் புதுப் பணக்காரன் என்று கூறுவர் என்றார்.
அவர்கள் கூறுவது சரிதான் என்று உணர்ந்தேன். சில மாதங்களில் என் செலவுகளைக் குறைந்துக் கொண்டேன்.
எதற்குச் செலவு செய்ய வேண்டுமோ அதற்கு நன்றாகச் செலவு செய்ய வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்கி புதுப் பணக்காரனாக ஒரு மாதம் சில மாதங்கள் இருக்கலாம் .
எப்போதும் புதுப்பணக்காரன் போல் வாங்கிக் கொண்டே இருந்தால் நம்மிடம் என்ன இருக்கிறது என்பது நமக்கே தெரியாமல் போகும்.
ஒரு பொருள் வாங்கும்போது, இது தேவைதானா என்று ஒன்றுக்கு இருமுறை யோசித்து வாங்குங்கள்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்