பழகுவோம்
பழகுவோம்

பழகுவோம்

செயற்கை நுண்ணறிவு (செ.நு) தொழில்நுட்பத்தை, அறிந்தும், அறியாமலும் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் நான் செய்யும் வேலையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்தாமல் தான் இருந்தேன்.

சாட் ஜி. பி.டி அறிமுகப்படுத்திய போது தொழில்நுட்பத் துறையில் இது பற்றி அதிகம் பேச ஆரம்பித்தனர். உண்மையில் நான் அப்போது கூடச் சாட் ஜி.பி.டியை பயன்படுத்தவில்லை. ஓரிரு முறை, அது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்திருப்பேன். அவ்வளவு தான்.

நான் பங்குபெற்ற நம் மற்றும் பிற நிறுவன உரையாடல்களிலும் இது(செ.நு) பற்றி அதிகம் பேச ஆரம்பித்தனர். சிலர் என்னிடம் செ.நு பற்றிக் கேள்விகள் கூடக் கேட்டனர். விடை தெரியாமல் முழித்தேன் என்று கூடச் சொல்லலாம்.

என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தான் அன்றாடம் தன் வேலையை, செ.நுவைப் பயன்படுத்தி எப்படி மேம்படுத்திக் கொள்கிறார் என்று காண்பித்தார். இதன் அவசியமும், தொழில்நுட்ப, மற்றும் பிற துறைகளில் ஏற்படும் மாற்றங்களும் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாமல் நாம் வேலை செய்தால், நமக்கு வேலையே கூட இருக்காது என்ற அச்சமும் வந்தது.

செ.நுவைப் பழகிக் கொள்ள வேண்டியதன் அவசியம் தெளிவாகப் புரிந்தது. சரி, நான் செ.நுவை எப்படி பயன்படுத்திக் கொண்டு நான் செய்யும் வேலையை மேம்படுத்துகிறேன்?

தெடரும்…

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category:
Tags:
Share
Download Download
Top