நாம் நம் உறவினர், நண்பர் வீட்டுத் திருமணம், பிறந்தநாள் விழாவிற்குச் செல்லும் போது என்ன பரிசு கொடுக்கலாம், அவர்கள் நமக்கு என்ன கொடுத்தார்கள் என்றெல்லாம் சிந்திப்போம்.
சில சமயம் நமக்கு யாராவது கொடுத்த பரிசுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும். அந்தப் பரிசுகளை நாம் செல்லும் விழாக்களில் பரிசாகக் கொடுக்க நேரிடும்.
நன்கு வசதி படைத்தோர் வீட்டிற்குச் செல்லும் போது விலையுயர்ந்த பரிசு பொருட்களும் சற்று வசதி குறைந்தோர் இல்ல விழாக்களில் அதற்கு ஏற்றார் போல் பரிசுகள் கொடுப்போம்.
நாம் கொடுத்த பரிசுப்பொருட்களை அவர்கள் வேறு ஒரு இல்ல விழாவிற்குச் செல்லும்போது பரிசாகக் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதுபோல் இல்லாமல், நாம் வாசித்து பயன் அடைந்த, அல்லது ஒரு நல்ல புத்தகத்தைத் தேடிப் பரிசாகக் கொடுங்கள். அந்தப் புத்தகத்தை அவர்கள் வாசிக்கும் போது அதன் பயன் பன்மடங்கு அதிகம்.
புத்தகம் ஒரு சிறந்தப் பரிசு, அடுத்தமுறை ஒரு நல்ல புத்தகத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பரிசாகக் கொடுங்கள்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்