சென்னை சாலைகளிலும், தெருக்களிலும் நீங்கள் செல்லும் போது சுற்றியுள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளை உற்று நோக்குங்கள். பெரும்பாலான பெயர்ப்பலகைகளில் தமிழைப் பார்க்க முடியாது.
எந்த மொழியில் பெயர்ப்பலகை இருந்தால் என்ன? இது ஒரு பிரச்சனையா? என்று நீங்கள் எண்ணலாம். 1969 ஆம் ஆண்டு மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என்று ஏன் அறிஞர் அண்ணா தலைமையிலான அரசு மாற்றியது? அதுபோல் தான் இதுவும்.
சட்டங்கள் ஏன் இயற்றுகிறோம். மக்கள் அதைப் பின்பற்றத்தானே? சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாடு கடைகள் நிறுவுதல் விதி-1948
சட்டம் தெளிவாக இருக்கும் போது அதை செயல்படுத்த ஏன் சிரமப்படுகிறோம்?
சரியோ, தவறோ, ஒரே இரவில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து நடைமுறைப்படுத்தும்போது, ஆறு மாதங்களில் தற்போது இருக்கும் நிலையை ஏன் மாற்றமுடியாது?
தொலைநோக்குப் பார்வையோடு சிந்திந்து தற்போது இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறினால் இதே நிலை தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், கிராமங்களில் பரவிவிடும்.
நல்ல செயல்படுத்துதல் மூலம் தற்போது உள்ள நிலையை நாம் எளிதாக மாற்ற முடியும்.
தமிழால் பெயர்ப் பலகைகளை மக்கள்-நாம் அலங்கரிக்கும் போது பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழும். தமிழ் சார்ந்த பொருளாதாரமும் வளரும்.
தமிழை வளர்ப்பது அரசின் தலையாய கடமைகளுள் ஒன்று.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்