சீக்கிரம் வா
Come Soon

சீக்கிரம் வா

நம் வீட்டில் இருந்து குடும்பமாக வெளியில் கிளம்பும் போது, சில பல சமயங்களில் ஒருவர் ரெடியாகி, சிலர் குறித்த நேரத்தில் கிளம்பாத போது சீக்கிரம் வா என்று அழைப்போம். சில சமயம் கோபம் கொண்டு குரலின் சத்தம் அதிகமாக ஒலிக்கும்.

நாம் சீக்கரம் வா என்று அழைத்ததாலேயே அவர்கள் கிளம்ப நேரம் ஆகும். சில சமயம், வெளியில் கொண்டு செல்ல வேண்டிய சில பொருட்களையும் மறந்து விடுவர்.

ஒரு நாள் முன்னரே. நாம் இந்த இடத்திற்கு, இத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும், தயாராக இருங்கள் என்று குடும்பத்தினரைத் தயார் படுத்தலாம். அவ்வாறு செய்தும் தாமதமாகக் கிளம்பினால் சீக்கிரம் வா என்று சொல்லாமல் நாம் ரெடியாகி அமைதியாக இருக்கலாம். நம் அமைதி சீக்கிரம்  அமைதி கிளம்பாதவர்களைச் சீக்கிரம் கிளம்பச் செய்யும்.

அனைத்தும் செய்த பின் ஒரு வேளை தாமதமாகக் கிளம்பினாலும் அதைப் பொறுத்துக் கொண்டு நாமும் தாமதமாகக் கிளம்பலாம். போகும் வழியில் தாமதத்தைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. காலப்போக்கில் அனைத்தும் சரியாகி விடும். அடுத்த முறை “சீக்கிரம் வா” என்று சொல்வதை தவிர்த்து விருங்கள். பொறுமை காத்திடுங்கள்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top