சாலை விபத்துகள்

சாலை விபத்துகள்

சாலை விபத்துகளுக்கு கவனக்குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், குண்டும் குழியுமான சாலைகள் ஒரு மிகப்பெரிய காரணம்.

2030 ஆம் ஆண்டளவில் சாலை இறப்புகளை 50% குறைக்கும் உலகளாவிய பிரகடனத்தில் (Global Declaration) இந்தியா கையெழுத்திட்டது.

தற்போது தென்மேற்கு பருவமழை எதிரொலியாக திருநெல்வேலியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதை நியுஸ் 7 தொலைக்காட்சி அண்மையில் செய்தி ஒளிபரப்பியது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 1969ல் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 47 லட்சம் ரூபாய் செலவில் நான்கு ஆண்டுகள் வேலை செய்து கட்டப்பட்ட திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் , 1973ம் ஆண்டு இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு வந்தது. திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பது போல் இந்தப் பாலம் இருந்ததால் ‘திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்’ என்று கலைஞரால் அழகாகப் பெயர் சூட்டப்பட்டது. இதை இரட்டைப் பாலம் என்றும் மக்கள் கூறுவர். இந்தப் பாலம் தற்போது பராமரிக்கப்படவில்லை என்றும், பாழடைந்து வருவதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு தமிழகம் முழுக்க உள்ள சாலைகளை சரி செய்வதன் மூலம் சாலை விபத்துகளைப் பெருமளவு குறைக்கலாம்.

கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன. இதையும் சரி செய்யலாம். 

‘தரமான சாலைகள்
வளமான தமிழகம்’

இதை நோக்கி நாம் பயணித்தல் வேண்டும்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top