சில, பல நேரங்களில் பல்வேறு காரணங்களால் நமக்கு கோபம் வரும். அப்போது நாம் அல்லது பிறர் உதிர்க்கும் சொற்கள் நம் கோபத்தை அதிகரிக்கும். கோபம் சண்டையாக மாறி நம் தினசரி வேலை, மகிழ்ச்சியை பாதிக்கும்.
இதற்கு முக்கியக் காரணம், பிறர் செய்யும் தவறுகளை நம்மால் பொறுத்துக் கொள்ள இயலாதது தான். அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
பிறர் தவறு செய்யும் போது அது அவர்கள் பார்வையில் சரியாக இருக்கலாம். நமக்குக் கிடைத்த வாய்ப்புகள், சூழல் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
ஒருவர் தவறு செய்கிறார் அல்லது வேண்டும் என்றே செய்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அதைக் கடந்து செல்லுங்கள்.
யார் என்ன செய்தாலும் அவர்களைத் திட்டாமல், கோபம் கொள்ளாமல், ஒரு நாள் பேசாமல் இருங்கள்.
மாற்றங்களுக்கு இது வித்திடும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்