உலகத் தாய்மொழி தினம்
இன்று (21-2-24) உலகத் தாய்மொழி தினம். நம் வீட்டில், நாம், நம் தாய்மொழியில் பேசுவோம், எழுதுவோம், சிந்திப்போம்.
ஏன் தாய் மொழியில் பேச வேண்டும்?
- நம் வேர்களோடு ஒன்றிட தாய்மொழி ஒரு சிறந்த பாலமாக இருக்கும்.
- நம் உடல் நலத்திற்கு உடற்பயிற்சி அவசியம். அதுபோல், நாம் நம் தாய்மொழியில் பேசுவதன் மூலம் நம் மனநலம் (Mental Health) மேலும் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
நம் தாய் மொழியில் பேசுவோம்
இனிய தாய்மொழி தின வாழ்த்துகள்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்