கடந்த வருடம் முதல் முறையாக இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் நடக்கும் தொழில் கருத்தரங்கம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு பிக் – மி நிறுவனர் ஜிப்ரி சுல்பர் உள்ளிட்ட பரைச் சந்திந்தேன். சென்னைக்கு மிக அருகில் என்பது போல் விமானம் ஏறினால் ஒரு மணி நேரத்தில் இலங்கை.
2024ல் நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் பயணிக்கும் வாய்ப்பு ஒன்று வந்தது. சென்னையில் இருந்து நேரடி விமானச் சேவை என்பதால் 40-50 நிமிடங்களில் யாழ்ப்பாணம் சென்று லிடலாம் . அங்கு பிரணவன் நடராஜன் உள்ளிட்ட நண்பர்களை தொழில் முறையில் சந்தித்தோம் .
நம் டிசிகாப் நிறுவனத்தில் அனைவரும் எங்கிருந்து வேண்டு மானாலும் வேலை செய்யலாம் . நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்கிறோம். வீட்டில் இருந்து வேலை செய்து, ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்தால் எப்படி? எனவே ஜூலை 4-7 அனைவரும் நான்கு நாள் பயணமாக இலக்கை சென்றோம் இதை DCKAP Homecoming என்று கூறுவோம். கொழும்பு காலி உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பார்தோம்.
மீண்டும் ஒரு நாள் பயணமாக கடந்த வாரம் இலங்கைக்கு பயணப்பட்டேன். இந்தியாவிற்கு மிக அருகில் இருந்தும் பல்வேறு காரணல்களால் இலங்கை செல்ல இயலாமல் இருந்த எனக்கு கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை இலங்கை சென்று வர வாய்ப்புகள் என்பது நான் எதிர்பாராதது. மேலும் பல நிறுவனங்களும், சுற்றுலாக் குழுக்களும் இதுபோல் இலங்கை பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தியா இலங்கை நம் இரு நாடுகளுக்கும் உறவுகள் மேம்பட நம் பயணங்கள் உதவும் நீங்களும் வாய்ப்பு கிடைக்கும்போது இலங்கை, குறிப்பாக யாழ்ப்பாணம் சென்று வாருங்கள்.
நன்றி.