ஞாயிறு கடிதத்திற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. அடுத்த சில வாரங்களுக்கு என்னை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து எழுதலாம் என்று இருக்கிறேன்.
அண்மையில், சென்னை அண்ணாநகரிலிருந்து திருவேற்காடு, வாரத்தில் சில நாட்கள் பயணிக்கிறேன் கோயம்பேடு, மதுரவாயல் என்று நேரே ஒரே ரோடு தான். சுமார் 10. கிலோமீட்டர் தூரம் இருக்கும் இதைக் கடக்க மொத்த பயண நேரம் 30 நிமிடத்திலிருந்து, 45 நிமிடம்வரை, சில சமயம் அதற்கு மேலும் ஆகிறது. இதுவே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழி.
தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு 40.கி.மீ ஓட்டினால் கூட 20 கி.மீயை கடக்க 30 நிமிடங்களும், 10 கி.மீனய கடக்க 15 நிமிடங்களும் தான் ஆகும். ஆனால் நமக்கு,
சென்னை – மதுரவாயல் பாலம் வேலைகள் நான் அறிந்த வரையில் சுமார் 15 வருடங்களாக நடந்து வருகின்றன. இந்தப் பகுதியில் ஒரு லட்சம் வாகனங்களுக்கு மேல் தினமும் செல்கின்றன. மதுரவாயலைத் தாண்டிப் பல கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. இதனால் பல மணி நேரம் பாதிப்படையும் மாணவர்கள், பொதுமக்கள் என்று கணக்கிட்டால் எத்தனை பேர்? நம் நேரச் செலவை கணக்கிடும் போது அதனால் வரும் பாதிப்புகள் எவ்வளவு?
இந்தப் பாலம் கட்டும் வேலைகள் தாமதத்தால் நேரம் வீணாகி, பாதிப்படையும் பலரில், நானும் ஒருவன்.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்