அரு. பெரியண்ணன் – மீனாட்சி நூற்றாண்டு விழா 
Periyannan

அரு. பெரியண்ணன் – மீனாட்சி நூற்றாண்டு விழா 

வரலாறுகளை ஆராயும் போது அவற்றில் எழுதப்படாத பக்கங்களே அதிகம். சமூக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய மனிதர்களையும், அவர்கள் ஆற்றிய பணிகளையும் ஆராய்ந்தால் அதனால் நாம் அடைந்த பயன்கள் ஏராளம். தமிழகத்தில் எழுந்த திராவிட இயக்கச் சிந்தனைகளை மக்களிடம் விதைக்க உதவிய ‘பொன்னி இதழின் நிறுலனர் அரு. பெரியண்ணனின் வரலாறும் இத்தகையதே. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, பாரதிதாசன் என்று பலர் பொன்னியில் எழுதினர். `பாரதிதாசன் பரம்பரை’ கவிஞர்களை அறிமுகப்படுத்தியதில் பொன்னி யின் பங்கு மகத்தானது.

பெரியண்ணன் -மீனாட்சி தம்பதியருக்கு தமிழரசி, பொன்னி, பூங்கோதை, சுலோச்சனா, வள்ளிக்கண்ணு, விசாலாட்சி, அழகப்பன் இரவி என்று மொத்தம் எட்டு பிள்ளைகள். இதில் பெரியண்ணனின் மூன்றாவது மகளான பூங்கோதை – ஆணழகன் சிதம்பரத்தின் மூத்த மகன் நான் . பெரியண்ணன் ஐயா மறைந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும், அவர் வளர்த்தெடுத்த குடும்பம் இன்னும் உயிர்ப்புடன் திகழ்கிறது.

அரு. பெரியண்ணனின் நூற்றாண்டுக்கு, சென்னை கிறித்துலக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரோஜாமுத்தையா நூலகத்தின் பங்களிப்புடன் பொன்னி இதழ்களை எண்ம வடிவில் வெளியிடுகிறோம் . அரு. பெரியண்ணன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடுகிறோம். 

விழா தேதி – செப்டம்பர் – 25 அம் தேதி (வியாழக்கிழமை) 

நேரம் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை

இடம் வாணி மகால் தி.நகர்- சென்னை.

மேலும் தகவல்கள் – அடுத்த வாரம். அனைவரும் வருக. 

-அரு. பெரியண்ணன்- மீனாட்சி குடும்பத்தார் .

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category:
Tags:
Share
Download Download
Top