தமிழின் அடையாளங்களுள் ஒன்று அதன் எழுத்துகள் ஆம். அ, ஆ, க, கா, வ, வா என்று நாம் எழுதுகிறோமே—அந்த எழுத்துக்கள் தமிழின் அடையாளங்களுள் ஒன்று. தற்போது அந்த தமிழின் அடையாளமே கேள்விக்குறியாகிறது என்றால் அது மிகையில்லை.
இக்காலத்தில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களைப் பாருங்கள். ஒட்டப்படும் சுவரொட்டிகளை நோக்குங்கள். திரைப்படத்தின் பெயர் தமிழில் இருந்தாலும், அதை எழுதுவது ஆங்கிலத்தில் . திரைப்படங்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. விற்கப்படும் பொருட்களில் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது
இந்த நிலை வெளிநாட்டில் இல்லை—நம் தமிழ்நாட்டில். இதற்கு சொல்லப்படும் ஒரு காரணம், “இன்னும் நிறையப் பேரை சென்றடையும் என்பது
தமிழ்நாட்டில் சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளின் விளம்பர எழுத்துகளைத் தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுவது எதைக் குறிக்கிறது?
நம் தமிழ்நாட்டில் தமிழை பெரும்பான்மையானவர்களுக்கு வாசிக்கவும் எழுதவும் தெரியவில்லை என்பதைத்தானே?
நம் தமிழுக்கு ஏன் இந்த நிலை?
தமிழின் அடையாளமான எழுத்துகள் அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இது பொதுநலம் சார்ந்தது மட்டுமல்ல; நம் குடும்ப நலம் சார்ந்ததும், நம் நலம் சார்ந்தது.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்