நம் தமிழக முதல்வர் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்று அறிவித்திருக்கிறார். பாராட்டுகள்.
தற்போது அரசு பணியாளர்களைத் தேர்வு செய்யும் T.N.P.S.Cல் ஒரு சரியான கால அட்டவணை இல்லாமல் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இதை சரி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில் ஆட்சி மொழி தமிழ். இது பெயரளவில் மட்டும் இருந்து விடாமல், செயல்படுத்த T.N.P.S.C தேர்வுகளைத் தமிழ் வழியில் எழுதுவோர்க்கு 95% முன்னுரிமை கொடுத்துத் தேர்ந்தெடுத்தால் என்ன?
இதுபோல் செய்யும் போது தமிழ் வளரும். அடுத்து வரும் தலைமுறைகள் தமிழை ஆர்வத்துடன் படிப்பர். தமிழில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ் படித்தோர் செழிப்புடன் வளருவர். நம் கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் .
இந்தக் கோரிக்கையைத் தொலைநோக்குப் பார்வையுடன் பரிசீலித்துத் தக்க முடிவுகள் எடுத்தால் ஒரு பெரும் மாற்றத்திற்கு வித்திடும்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்