மாமல்லபுரம் – ₹75

மாமல்லபுரம் – ₹75

ஒரு வருடத்தில் 8 கோடிக்கும் மேல் மக்கள் மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்திற்கு வருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன்னால் நம் மாமல்லபுரம் சென்றிருந்தேன்.

மாமல்லபுரச் சாலையில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி ரூ 75 தர வேண்டும்.  பணம் கொடுத்தால் தான் நீங்கள் செல்ல முடியும். இது அரசு விதித்த வரி என்றார். வேறு வழி இல்லாமல் பணத்தைக் கொடுத்தோம்.

மாமல்லபுரத்தில் இருந்து மறுபடியும் சென்னை வர ஓலா தேவைப்பட்டது. வாகனம் உள்ளே வந்து அழைத்துச் செல்ல மீண்டும் ரூ 75. ஒவ்வொரு வாகனமும் ரூ 75 கொடுத்தால் தான் மாமல்லபுரச் சாலையில் அனுமதிக்கப்படும்.

அவர்கள் கொடுத்த இரசீதில் G.O. No. 90/2023 என்று இருந்தது. இணையத்தில் தேடிப் பார்த்தால் தெளிவு இல்லை.

ஒவ்வொரு முறை நாம் மாமல்லபுரம் செல்லும் போது ஏன் ரூ 75 தர  வேண்டும்? இதுவரை இது போல் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது?. அதனால் வந்த பயன் என்ன போன்றவற்றை தெளிவாகத் தெரிவித்தால் மாமல்லபுரம் செல்வோருக்கும், அங்கு வசிப்போருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இந்தியாவில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற நம் மாமல்லபுரம் செல்ல நாம் ஏன் நுழைவு வரி கட்டவேண்டும்? மாமல்லபுரம் நுழைவு வரி வசூலிப்பதை நிறுத்த ஆவன செய்ய வேண்டும். இச்செய்தியைப் பகிருங்கள். மாமல்லபுரம் நுழைவு வரி வசூலிப்பதை நிறுத்துவோம். 

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top