காமராசர்

காமராசர்

1903 ல் விருதுநகரில் பிறந்த காமராசரின் பிறந்த தினம் இன்று. அவர் தமிழ்நாட்டின் (மதராஸ் மாநிலம்) மூன்றாவது முதலமைச்சராக இருந்தபோது அவர் ஆட்சி காலத்தில் (1954-63) 

  • கல்பாக்கம் அணுமின் நிலையம்
  • மேட்டூர் கால்லாய்த் திட்டம்
  • நெய்வேலி நிலக்கரித் திட்டம் 

என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும் இன்றளவும் பேசப்படுவது அவர் தமிழகத்தில் திறந்த ஆயிரம் ஆயிரம் பள்ளிகள்.

காமராசர் 1950, 60களில் பல ஆயிரம் அரசு பள்ளிகள் திறந்து நமக்கு ஒரு மிகப் பெரிய அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

காமராசர் ஆட்சி காலத்தில் திறந்த அரசு பள்ளிகளை பன்மடங்கு மேம்படுத்தி உலகத்தர கல்வித் தளங்களாக மாற்ற வேண்டும். அதற்கு உரிய இட வசதி நம்மிடம் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் அரசு பள்ளிகள் நோக்கி செல்வோரின் எண்ணிக்கை கூடும். தனியார் பள்ளிகளில் கட்டணமும் குறையும். 

அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் உடைய சமுதாயம் உருவாக வழி செய்யும். இதைத் தான் காமராசரும் விரும்பி இருப்பார்.

நாங்கள் படிக்க வழி செய்த காமராசருக்கு கோடான கோடி நன்றிகள். 

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Wishes
Share
Download Download
Top