கடன்

கடன்

2007ல் சென்னை சோளிங்கநல்லூரில் வங்கியில் 30 லட்சம் கடன் பெற்று ஒரு நிலம் வாங்கினேன். அப்போது எனக்கு நிதி அறிவெல்லாம் பெரிதாக இல்லை.

ஒரு வருடம், மாதா மாதம் ஒழுங்காகத் தான் கடனைக் கட்டினேன். பின்னர் ஏனோ ஒரு காரணத்தால் விளையாட்டாகக் கடனைச் செலத்துவதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

வங்கியில் இருந்து பணத்தைக் கட்டுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள். வங்கியில் உள்ளோர் எல்லாம் நம் நண்பர்கள் தானே என்ன செய்து விடய் போகிறார்கள் என்று எண்ணினேன்.

கடனைச் சரியாகச் செலுத்தாததால் வட்டிக்கு வட்டி போட்டு கடன் தொகை பல லட்சங்கள் ஏறி இருந்தது. கடன் தவணையை ஒழுங்காகக் கட்டவில்லை என்றால் வட்டிக்கு வட்டியெல்லாம் போட்டு கடன்தொகை பண்மடங்கு ஏறும் என்று அப்போதுதான் ஓரளவு புரிந்தது.

அதன்பின் தவணைத் தவறாமல், சில சமயங்களில் இரண்டு, மூன்று தவணைகளை ஒன்றாகக் கட்டி கடனை அடைத்து நிலத்தின் பத்திரத்தை வங்கியிடம் இருந்து மீட்டேன்.

இது என் தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. கடன் குறித்து உங்கள் அனுபவங்கள் இருந்தால் பகிருங்கள்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top