ஒடிசா இரயில் விபத்து

ஒடிசா இரயில் விபத்து

ஜூன் 2-ஆம் தேதி் ஒடிசாவில் நடந்த பஹனாகா பஜார், கோரமண்டல் – ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் 280 க்கும் அதிகமான மக்கள் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தக் கொடூர விபத்துக்கு மத்திய இரயில்வே அமைச்சகம் பொறுப்பேற்று, இந்த விபத்து இதனால் தான் நடந்தது, இது போன்று செய்திருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம் என்று ஒரு வெளிப்படையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

பயணிகள் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தால் அதனை ஒப்புக்கொண்டு சரி செய்வது ஒரு முன்மாதிரியான அரசை உருவாக்கும்.

உயிரிழந்தோருக்குக் கொடுக்கும் உதவித்தொகையை விட இன்னும் 100 வருடங்களுக்கு இதுபோன்று ஒரு விபத்து நடக்காமல் தடுத்து அனைத்து அரசு துறைகளையும் நேர்மையுடன் மேம்படுத்துவது நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும். 

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top