என்.ஐ.டி தமிழ்மன்றம்

என்.ஐ.டி தமிழ்மன்றம்

மொழி மூலம் பொருள் ஈட்டுதல் ஒரு மொழியை வளர்க்கும். தமிழையும் பொருளையும் இணைக்கும் முயற்சி தான் பொருட்பால். கடந்த வாரம் (18/11/23) தேசிய தொழில் நுட்பக் கல்லூரி (NIT) – திருச்சி தமிழ் மன்றம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்.

1969ல் தொடங்கப்பட்ட NIT திருச்சியின் தமிழ் மன்றம் முழுக்க முழுக்க மாணவர்களால் முன்னெடுத்து நடத்தப்படுகிறது. நித்திலம் இதழ் வெளியீடும், பொருப்பால் கருத்தரங்கமும் நடைபெற்றது. 

கல்லூரிச் சூழல், மாணவர்களிடம் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியையும், கற்றலையும் தந்தது. மாணவர்களால் நடத்தப்படும் தமிழ் மன்ற நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திய தலைவர் தமிழ் மன்றத் தலைவர் அருண் பிராபகர், பொதுச் செயலாளர் யுகேந்தர், பொருளாளர் நரேன், துணைத் தலைவி புகழரசி மற்றும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுகள். 

இது போன்று தமிழ் மன்றங்கள், தமிழகத்தின் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக அனைத்து சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். தமிழ் மூலம் பொருள் ஈட்ட வேண்டும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Category: Wishes
Share
Download Download
Top