வணக்கம். தமிழ்நாடு முதல்வர் தமிழகத்தில் பங்கேற்றுத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ் சொற்களைப் பயன்படுத்தினால், மிகவும் சிறப்பாக இருக்கும். இதை முதல்வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்துதல் அவசியம். ரியல் எஸ்டேட் என்றால் என்ன? விஷன் என்றால் என்ன? மலேசிய பத்துமலை தமிழ்ப்பள்ளியில் அழகாக ‘இலக்கியல் நோக்கு’ என்று எழுதியுள்ளனர். அதுபோல் நாமும் செய்தால் என்ன?
தமிழ்நாட்டில் இதுபோன்ற மாற்றங்கள் மிகவும் அவசியம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்