அண்ணாநகர் டவர் பூங்கா

அண்ணாநகர் டவர் பூங்கா

அண்ணாநகர் டவர் பூங்காவில் சென்ற வாரம் (26/8/23 – 27/8/23) தனியார் அமைப்பு ஒன்று ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தியது. அந்தக் கண்காட்சிக்கு நானும் சென்று இருந்தேன். 

ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வருகை தந்த சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜே. இராதாகிருஷ்ணனிடம் டவர் பூங்காவில் கண்காட்சி நடக்க தங்களுக்கும் பணம் தர வேண்டும் என்று அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிலர் அவரிடம் அல்லது நிகழ்ச்சி நடத்தியவர்களிடம் பணம் கேட்டுள்ளனர்.

ஒரு பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்த அந்தப் பகுதி கவுன்சிலர், காவல் நிலையம், சுற்றுச்சூழல், தீயணைப்புத் துறை, சட்டமன்ற உறுப்பினர் என்று பலரிடம் தெரிவித்து விட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.

சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் நடந்த நிகழ்வை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதைச் சீர் செய்தால் என்ன?

பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த பத்து அரசு அலுவலகங்களிலும், பலரிடமும் அனுமதி வாங்கும் தேவையில்லாமல், ஆன்லைனில் விண்ணப்பித்து, சுய சான்றளிப்பு (Self Attestation) அளித்து தமிழக அரசிடம் பணத்தை செலுத்தலாம்.

சென்னையில் உள்ள பூங்காக்களை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சிகள் நடத்த வரையறைகளை தெளிவுபடுத்தி அரசே பணத்தை வசூலித்தால் பொதுமக்கள் பயன் அடைவர். அரசுக்கும் வருவாய் பெருகும். 

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top