எப்படி வேலை செய்ய வேண்டும்
How to work

எப்படி வேலை செய்ய வேண்டும்

யாருடன் வேலை செய்ய வேண்டும் என்று சென்ற வாரம் ஞாயிறு கடிதத்தில் பார்த்தோம். இந்த வாரம் ‘எப்படி வேலை செய்ய வேண்டும்’

  1. நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும் செய்வதைத் திருந்த அழகாகச் செய்யாவும்.
  2. நீங்கள் செய்யும் வேலை இதை யார் செய்தது என்று கேட்கும் அளவில் இருத்தல் வேண்டும்
  3. கொடுத்த வேலையுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் கொடுக்காத வேலையும் செய்து, நம் எல்லையைத் தாண்டி வேலை செய்ய வேண்டும். (Expand Boundaries)
  4. நாம் செய்யும் வேலை, நாம் இல்லை என்றாலும் எந்தத் தடையும் இல்லாமல் தொழில் நடக்கும் விதத்தில் இருத்தல் வேண்டும்.  வேலைக்குரிய குறிப்புகளை எழுதி பகிர வேண்டும். நம்மோடு வேலை செய்வோர் நம்மைலிட சிறப்பாக வேலை செய்ய பயிற்சியும் ஊக்கமும்தர வேண்டும்.
  5. நாம் ஒவ்வொருவரும் ஒரு தொழில் முனைவோரே. நாம் செய்யும் வேலை மாற்றங்களுக்கு வித்திட்டு உலகத் தரத்தில் இருத்தல் வேண்டும்.

தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்தி, செய்யும் வேலையை எளிதாக்கி நாம் கற்றுக் கொண்டே இருத்தல் வேண்டும். நாம் செய்யும் வேலையால் பலருக்கு நன்மை பயக்க வேண்டும். இது நம்மை அடுத்தக் கட்டத்திற்குப் பன்மடங்கு நகர்த்தும்.

நன்றி.

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top